» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவியிலும் குளித்து குதூகலம்

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:48:22 AM (IST)



வாரவிடுமுறையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கன்னியாகுமரி குவிந்தனர். அவர்கள் ஆவலுடன் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடல் சங்கமம் கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டது. பின்னர் 2 மணிநேரத்துக்கு பிறகு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். 

கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று கடல் அழகையும், திருவள்ளுவர் சிலையையும் பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோல் திற்பரப்பிலும் காலையிலேயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அப்போது திற்பரப்பில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory