» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாகவே துவக்கம்!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:33:49 AM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

டிக்கெட் முன்பதிவு நாள் - பயண நாள் - கிழமை

ஆகஸ்ட் 17 - அக்டோபர் 16-2025 - வியாழன் 

ஆகஸ்ட் 18 - அக்டோபர் 17-2025 - வெள்ளி 

ஆகஸ்ட் 19 - அக்டோபர் 18- 2025 - சனிக்கிழமை 

ஆகஸ்ட் 20 - அக்டோபர் 19- 2025 - ஞாயிறு

ஆகஸ்ட் 21 - அக்டோபர் 20-2025 - திங்கட்கிழமை - தீபாவளி பண்டிகை

ஆகஸ்ட் 22 - அக்டோபர் 21 -2025 - செவ்வாய் 

ஆகஸ்ட் 23 - அக்டோபர் 22-2025 - புதன்கிழமை 

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

வட இந்திய இரயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory