» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்!

புதன் 13, ஆகஸ்ட் 2025 10:42:17 AM (IST)

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அந்த கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இன்று இணைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். அதிமுகவில் இணைவதற்கு முன்னதாக, 1995 முதல் 1997 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் மைத்ரேயன் இருந்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மJun 26, 1755 - 06:30:00 PM | Posted IP 172.7*****

திருடன் அதன் கூடாரத்தில் தான் போகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory