» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுதந்திர தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

புதன் 13, ஆகஸ்ட் 2025 4:49:58 PM (IST)

கன்னியாகுமரியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள கடற்கரை பகுதி, தனியார் தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார் நவீன ரோந்து படகுகளில் கடல் வழி பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory