» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்: விஜய் வசந்த் எம்.பி

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:15:27 AM (IST)

சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம் என்று விஜய் வசந்த் எம்.பி.,  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "நாம் இன்று நமது தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நம் தேசம் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை முறித்து, சுதந்திரத்தின் ஒளியை கண்டது. 

அந்த சுதந்திரத்தை பெற, எண்ணற்ற சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தையும், சொத்தையும் தியாகம் செய்தனர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும், அவர்கள் ரத்தமும், வியர்வையும், உறுதியும் கலந்திருக்கிறது. அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வது  நமது கடமை. நான் பெற்ற இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்கு பெருமையாகக் கையளிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

இன்று  நாம் பிரிவினையை விட ஒற்றுமையையும்,  வெறுப்பை விட அன்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவினை மற்றும் வெறுப்பை விதைக்க நினைக்கும் சக்திகளை இனம் கண்டு தோற்கடிப்போம்.
நம் தேசத்தின் செழிப்பு, மக்களின் ஒற்றுமை, இளைஞர்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின்  நலன் இவை அனைத்தும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இன்று சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைத்த உரிமைகளை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. நமது அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட இன்று கேள்விகுறியாக உள்ளது. நமது உரிமைகளை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்.இந்த சுதந்திர தினத்தில், நம் தேசத்தை நீதியிலும் சமத்துவத்திலும் வளர்க்க உறுதிபடுவோம்."நாடு முதலில், நாமெல்லாம் ஒன்றாக” — இந்த உணர்வோடு முன்னேறுவோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory