» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சனி 16, ஆகஸ்ட் 2025 12:22:24 PM (IST)

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் சிவாஜி நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும், சீலப்பாடியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், காவலர்கள் அங்கு சோதனை செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்
சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)

மாநில அளவிலான வின்வெளி அறிவியல் மாநாடு தொடக்கம் : இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 3:11:49 PM (IST)

பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
சனி 16, ஆகஸ்ட் 2025 11:53:39 AM (IST)

புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 9:02:29 AM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)
