» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்

சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)



தூத்துக்குடியில் உப்பள தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சீமானிடம் கோரிக்கை உப்பு உற்பத்தியாளர்கள் விடுத்தனர்.

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் மேற்கொள்ளப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காடு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முள்ளக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் சார்பாக எல்.ஆர். சிவாகர், பிரபாகர், பாரத் ஸ்ரீராம், சண்முகநாதன் உள்ளிட்டோர், உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஏராளமானோர்  கையெழுத்திட்டிருந்தனர். அதனை 17 வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன், ராமர், ரமேஷ் உள்ளிட்டோர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து தூத்துக்குடி உப்பள தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க கோரிக்கை விடுத்தனர், அவர்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன் தைரியமாக இருங்கள் என்று உறுதி கூறினார்.

இதனைத் தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை பாதுகாக்க அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory