» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநில அளவிலான வின்வெளி அறிவியல் மாநாடு தொடக்கம் : இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு

சனி 16, ஆகஸ்ட் 2025 3:11:49 PM (IST)



சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் பெங்களூரு, இந்திய கணிதவியல் நிறுவனம் சென்னை, தமிழ்நாடு உயர் கல்வி  அறிவியல் கழகம், ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன், அறிவியல் பலகை ஆகிய அமைப்புகள் இணைந்து சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவை நடத்தியது.

மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 17 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 10 மண்டலங்களில் மாநாடுகளை நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில  மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள்,போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரித்தல்.போட்டோகிராபி,அஸ்ட்ரானமி விளையாட்டுக்கள் ஆகிய  தலைப்புகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி செயலாளர் ஏ.பி செல்வராஜ் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி நிர்வாகிகள் சாந்தி, சிந்தியா, நித்யா,ராஜ ராஜேஸ்வரி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.

இந்திய ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநில மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக இளைஞர்களிடம்  மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் கலந்துரையாடல் செய்தார்.

இதில் பெங்களூரு இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், நிருஜி மோகன் ராமானுஜம், கிரிஸ்பின் கார்த்திக்,டாஸ் மாநில பொதுச் செயலாளர் மனோகர்,5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாநில மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் உதயன் நன்றி கூறினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டின் நிறைவு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பங்கேற்று உரையாற்றுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory