» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 9:02:29 AM (IST)

காமநாயக்கன்பட்டியில் உள்ள புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு 7 மணியளவில் ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சிவகங்கை மறைமாவாட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணியளவில் மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டது. கடந்த 9-ந்தேதி காலை 9 மணியளவில் மரியன்னை மாநாடு நிகழ்ச்சியும், 10-ந் தேதி காலை 8.30 மணியளவில் புதுநன்மை விழாவும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. முக்கிய விழாவான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் தேரடி திருப்பலியும், பரலோக மாதா மற்றும் விண்ணரசி மாதா தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் ஆலய வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். காலை 6 மணி மற்றும் 8 மணிக்கு பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.
தொடர்ந்து கேரளா, பாம்பே உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக நேற்று மதியம் 12 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 2 மணியளவில் ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலை 4 மணியளவில் இந்தியில் திருப்பலியும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி, குருவிநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இறைமக்கள் மற்றும் ஆலய திருத்தல அதிபர் மோயீசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்
சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)

மாநில அளவிலான வின்வெளி அறிவியல் மாநாடு தொடக்கம் : இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 3:11:49 PM (IST)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சனி 16, ஆகஸ்ட் 2025 12:22:24 PM (IST)

பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
சனி 16, ஆகஸ்ட் 2025 11:53:39 AM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)
