» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:24:14 AM (IST)



தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் இளம்பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழா இன்று நடைபெற்றது. விழாவில்; மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்  சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். மேலும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ. 5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலர், மகளிர் திட்டம், நில அளவை பதிவேடு துறை, கூட்டுறவுத்துறை,  உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பாக பணிபுரிந்த 515 அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 7 பள்ளிகளைச் சார்ந்த 705 மாணவர்கள் மற்றும் 55 ஆசிரியர்கள் என மொத்தம் 760 நபர்கள் கலந்து கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை மாவட்ட ஆட்சியர்  கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய 69 காவல்துறையினருக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். விழாவில், மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சைனிக் பள்ளி மாணவர்களின் பேக் பேண்ட் பைப் இசை நிகழ்ச்சி நடைபெற்றது



இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (கோவில்பட்டி)  ஹிமான்ஷீ மங்கள்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம்,  வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), சுகுமாறன் (திருச்செந்தூர்), காவல் துறை உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory