» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு : கதவை உடைத்து துணிகரம்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:28:15 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தலைமை அர்ச்சகரான குமார் பட்டரின் வீடு, கோவில் பின்புறம் கீழமலையான் தெருவில் உள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி உடல்நலக் குறைவால் குமார் பட்டர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் புதன்கிழமை (ஆக. 13) மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 107 பவுன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.53½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து  புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். குலசேகரன்பட்டினம் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory