» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி கவிதா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5,000 அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதமும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசுராஜ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)

புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: பயணிகள் ஏமாற்றம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:48:58 AM (IST)

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:06:59 AM (IST)

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:24:14 AM (IST)

சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்: விஜய் வசந்த் எம்.பி
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:15:27 AM (IST)
