» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 10:57:48 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் ஸ்ரீ முருகன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலமாக இருசக்கர வாகனங்களுக்கு கடன் உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை 07.30 மணி அளவில் திறக்க வந்தபோது, கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.6 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)

கவின் ஆவணக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சித்தி மகனை கைது செய்தது சிபிசிஐடி!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:52:10 PM (IST)

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:27:46 PM (IST)

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:15:49 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:04:54 PM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:54:59 PM (IST)
