» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளவிளை புனித செபஸ்தியார் ஆலய சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு பள்ளவிளை புனித செபஸ்தியார் ஆலய சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு, முகாமில் மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட அரங்கம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து வாங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் நாகர்கோவில் மாநகர் நகர்நல அலுவலர் ஆல்பர் மதியரசு, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory