» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்து வந்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவர் முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory