» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
வெள்ளி 3, அக்டோபர் 2025 10:21:11 AM (IST)
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக கோவை-நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் நாளை (சனிக்கிழமை) குறிப்பிட்ட ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-கோவை (வண்டி எண்.16321) எக்ஸ்பிரஸ் நாளை நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர்-கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
எனவே, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும். கோவை-நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் நாளை கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கரூர்-விருதுநகர் இடையே, திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இதனால் பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. எனவே, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
