» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை!

வெள்ளி 3, அக்டோபர் 2025 11:04:01 AM (IST)



சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர்  அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.

இதுதொடர் பாக சைபர்  குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory