» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
வெள்ளி 3, அக்டோபர் 2025 4:16:29 PM (IST)
கரூரில், விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரசாரம் செய்தபோது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை அமர்வு, ஒரு வழக்கு விசாரணை நடைபெற்று, அதில் திருப்தி இல்லாவிட்டால் விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி கோரலாம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு எவ்வாறு கோர முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் பாதிக்கப்பட்டவரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதால், எம்எல் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணைக் கோரியவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்றும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள். யாராவது இப்படி நடக்கும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
