» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் சென்னை ‍- நெல்லை வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்!

வெள்ளி 3, அக்டோபர் 2025 4:48:08 PM (IST)

சென்னை -  நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தினமும் சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு நெல்லை சந்திப்பை அடைகிறது. மறுபுறம், நெல்லையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். தற்போது இந்த ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.  

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூர் -  நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory