» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!

சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்து கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, அன்புமணி கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.

அவரை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இதனை அறிவித்த ராமதாஸ், 'காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்' என்று தெரிவித்தார். இதுகுறித்து காந்திமதி, 'இந்த பதவி எனக்கு எதிர்பாராமல் கிடைத்தது,தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory