» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)
நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 
 இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் லஞ்சம் வாங்கும் போலீசாரை இனம் கண்டு அவர்களை களை எடுக்கும் பணி தொடரும் என்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளது போலீசாரின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முழுவதும் தடை விதிப்பதாகவே  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 மேலும் நேர்மையாக பணியாற்றும் போலீசார் மட்டுமே குமரி மாவட்டத்தில் தனக்கு கீழ் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி : கோவில்பட்டியில் பரபரப்பு!
சனி 25, அக்டோபர் 2025 4:50:15 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!
சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)

பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியாகும் : அன்பில் மகேஸ் அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 4:00:16 PM (IST)




