» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!

புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது 

இந்த நிலையில் ஒருவரிடம் லஞ்ச பணம் பெறும்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இன்று மாலை அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory