» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை

வியாழன் 30, அக்டோபர் 2025 11:16:53 AM (IST)



தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இயக்க வேண்டும் வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு  தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் எம். பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி-சென்னை முத்துநகர் விரைவு ரயிலில் எப்போதும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதைத் தவிர்க்க, தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்களைத் தினமும் இயக்க வேண்டும்.

ரயில் எண். 16765-16766 தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். ரயில் எண். 22101-22102 மதுரை-லோகமான்ய திலக் விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory