» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி: ஆட்சியரிடம் புகார்!

திங்கள் 3, நவம்பர் 2025 12:55:06 PM (IST)



அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரை சிலர் கொல்ல முயற்சிப்பதாகவும்,  இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் உமரிக்காடு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமேஷ்குமார் அளித்த மனுவில், "நான் கடந்த 2020 ஜனவரி 6 முதல் 2025 ஜனவரி 5 வரை உமரிக்காடு பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் திருவைகுண்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறேன். எனக்கு அரசியல் ரீதியான காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ எனது உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுனுத்துதல்கள் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டு வருகிறது. 

கடந்த 2025 அக்டோபர் 13-ஆம் தேதியன்று எனது நான்கு சக்கர வாகனமானத்தின் பின் சக்கரத்திலுள்ள போல்ட் நட்டுகளை அரைகுறையாக கழற்றி விட்டு விபத்தினை ஏற்படுத்தி என்னை குடும்பத்துடன் கொலை செய்ய மர்ம நபர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்று கடந்த 2023 மார்ச் 31-ஆம் தேதியன்று எனது வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி மர்ம நபர்கள் உட்புகுந்து எனது இரு சக்கர வாகனத்தை முற்றிலும் சேதப்படுத்தி விட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்று விட்டார்கள். 

இந்த சம்பவங்கள் குறித்து அச்சமயம் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் விசாரணையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணை கண்காணிப்பாளர் முதல் டி.ஜி.பி வரையிலும் பதிவு தபாலில் மற்றும் ஆன்லைன் புகார் மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தேர்தல் காலங்கள் நெருங்கி விட்டதாலும், இனிமேலும் இதுகுறித்து தாமப்படுத்தாமல் மேற்படி சம்பவங்கள் மீது தகுந்த விசாரணை செய்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் மூலம் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory