» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணி இடங்கள்: நவ.16 வரை விண்ணப்பிக்கலாம்!

திங்கள் 3, நவம்பர் 2025 3:18:29 PM (IST)

தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நவ. 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) காலிப்பணியிடங்களுக்கு நவ. 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) அறிவித்துள்ளது. காலி பணி இடங்கள்: 1,429. 

கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து பிளஸ்-டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்/ சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி வயது வரம்பு எதுவும் கிடையாது. 

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-11-2025

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory