» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நவ.17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் - வானிலை ஆய்வு மையம்!

வியாழன் 13, நவம்பர் 2025 3:36:40 PM (IST)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 17 முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை காலமே அதிக மழைப்பொழிவை அளித்து வருகிறது.

கடந்த மாத இறுதி வரை வடகிழக்குப் பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை பெய்துள்ளது. இரண்டு வாரங்களாக மழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தாலும் இந்த மாதத்திற்கான வடகிழக்குப் பருவமழை இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியிலிருந்து கிழக்கு திசைக்காற்றும் வட இந்தியாவிலிருந்து வடக்கு திசை காற்று வடகிழக்கு காற்றாக மாறியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும். நவம்பர் 17-க்குப் பிறகு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கடுத்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வரும் நவம்பர் 17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே, டிசம்பர் மாத மத்திய பகுதியில் நல்ல மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory