» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

வியாழன் 13, நவம்பர் 2025 4:07:39 PM (IST)

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன் கூட்டணி ஏற்படலாம் என சொல்பவர்கள்தான் யோசிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: அதிமுக- பாஜக கூட்டணியில் இன்னொரு பெரிய கட்சி இணையப் போகிறது என்றும் மெகா கூட்டணி அமையப் போகிறது என்றும் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படலாம் என்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்துக்கு அதிமுக தான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேநேரத்தில் ஒரு பொதுத்தேர்தலைக் கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்பது போன்ற பெரிய வார்த்தைகளைப் பேசலாமா என்பதை அவர்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். அதிமுகவும், பாஜகவும் ஒரு குடையின் கீழ் இணைந்து தோ்தலைச் சந்திக்கிறோம். தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும் என்றாா்.

மேலும், அமைச்சர் சேகர்பாபு நல்ல நண்பர்தான். எனது பதவி மியூசிக்கல் சேர் என்கிறார். எனது பதவி 3 ஆண்டுகள் தான். ஆனால் அவரது அமைச்சர் பதவி இன்னும் 3 மாதங்கள் தான். அதிமுக கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். எங்களை நம்பி வந்த ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைக் கைவிட்டுவிட்டதாக கேட்கிறீர்கள். அவர்களாகத்தான் வெளியே சென்றார்கள். மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்றார் நயினார் நாகேந்திரன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory