» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!

புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருவதால் அசுத்தமான ஆறுகள், நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

அமீபிக் மூளைக்காய்ச்சல் நெய்கெலேரியா பொளேரி என்ற மூளையை திண்றும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான மூளை காய்ச்சல் நோய். சமீபத்தில், கேரளா மாநிலத்தில் நோய்த்தொற்று தொடர்ந்து பதிவாகி வருவதுடன் ஒரு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மாசடைந்த அல்லது தேங்கி நிற்கும் சுத்தமில்லாத நீர் நிலைகளில் இந்த கிருமி இருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய நீர்நிலைகளில் குளிக்கும்போது அமீபா கிருமி மூக்கு வழியாக மூளைக்குச்சென்று தொற்று ஏற்படுத்தும்.

இந்நோய் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது. கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்துவலி, குழப்பம், வலிப்பு, மயக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள். சரியான சிகிச்சை இல்லையெனில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மாசடைந்து நிற்கும் அல்லது சுத்தமில்லாத நீரில் நீந்துதல், குளித்தல் அல்லது விளையாடுதல் தவிர்க்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்த பின்னரே குளிக்க வேண்டும். மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் நீர் நிலைகளில் குளித்தப் பிறகு தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்.

குறிப்பாக, கேரளா செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுக்காப்பாக மூடிக் குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள். நீரோடைகள் மற்றும் குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு நோய் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பொது மக்கள் இந்நோய் குறித்து பீதியடைய தேவையில்லை என  கேட்டுக்கொள்ப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,  தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory