» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொய்கை அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (18.11.2025) ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்ட பாசன நிலங்களுக்கு இன்று (18.11.2025) முதல் 03.12.2025 வரை 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டங்களில் உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நீர்வளத்துறை அருள்சன் பிரைட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், உதவி செயற்பொறியாளர்கள் வல்சன் போஸ், அஜீஸ், கோதையாறு நீர்பாசன தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் : அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:25:22 AM (IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)


