» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.  

தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மாரி தங்கம் (28), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று ஏரலில் வேலை செய்துவிட்டு பைக்கில் முத்தையாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த மாரித்தங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து கலவை எந்திரத்தை அனுமதி இல்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த தாமோதரன் மகன் சரவண பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory