» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:59:09 AM (IST)
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் கடத்தி வதந்த ரூ.4½ கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்தும் சோதனை செய்தனர்.
அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, அதில் உயர்ரக ஐஸ் போதைப்பொருள் இருந்தது.உடனே பஸ்சை முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த போதைப்பொருளை கடத்தி வந்தவர் யார்? என தெரியாததால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ் ரக போதைப்பொருள் சுமார் 1½ கிலோ எடையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4½ கோடி என கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)

கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை: எ.வ.வேலு
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:45:33 AM (IST)

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)




