» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)



தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு பெறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.  நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்வாக அடுத்தமாதம்(டிச.) 14-ந் தேதி பகல் 11 மணிக்கு ஐவராஜா, மாலையம்மன் பூஜையும், பகல் 12 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது. 

டிச.15-ந் தேதி காலை 10 மணிக்கு மகளிர் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சியும், காலை 11 மணி, பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். 

இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலா ெசன்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 16-ந் ேததி காலை 6 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால் குடங்கள் ஊர்வலமும், காலை 7 மணிக்கு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, காலை 9 மணிக்கு அன்னை பூர்ண பொற்கலை சமேத கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்படும். காலை 9.45 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 

பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4.45 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் பிரசித்திப் பெற்ற கள்ளர் வெட்டு நிகழ்சி நடக்கிறது. விழாஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory