» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை - கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:33:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.10.2025 அன்று நடந்த கொலை முயற்சி  வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (21)  என்பவரையும், அதேபோன்று கடந்த 14.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (18.11.2025)  சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory