» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 இளஞ்சிறார்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்தனர். 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவ சங்கரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அஜய் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை விசாரணையில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மாரியப்பன்(22) மற்றும் நான்கு 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுடன் மேள தளம் முழங்க மனு கொடுக்க வந்த விவசாயி!
புதன் 26, நவம்பர் 2025 9:42:49 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!
புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:12:54 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!
புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)




