» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைதிரும்பின.
தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் கடற்கரை மற்றும் துறைமுகங்களில் மீனவர் விசைப்படகு, மற்றும் வள்ளங்களை பத்திரமாக நிறுத்தி வைத்தனர். சின்னமுட்டம்,குளச்சல், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகஙகளில் இருந்து சுமார் 2200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றன.
இதில் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு சுமார் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிவிட்டன. 400க்கு மேற்பட்ட விசைப்படகுகள் தகவல் கொடுப்பட்டதாகவும் மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திரும்பிய படகுகளை மீனவர்கள் பத்திரமாக தரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுடன் மேள தளம் முழங்க மனு கொடுக்க வந்த விவசாயி!
புதன் 26, நவம்பர் 2025 9:42:49 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் கட்சியை இணைத்தார் தமிழருவி மணியன்!
புதன் 26, நவம்பர் 2025 4:28:11 PM (IST)

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:12:54 PM (IST)

தவெகவில் இணைய முடிவு? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்!
புதன் 26, நவம்பர் 2025 12:17:08 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ : காவல்துறையிடம் அனுமதி கோரி மனு!
புதன் 26, நவம்பர் 2025 11:28:57 AM (IST)




