» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்

புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளில் திமுக​வினரின் தில்லு​முல்​லுகளை தடுத்து நிறுத்​துங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலா​ளர்​களுக்கு கட்சியின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி அறிவுறுத்​தி​யுள்​ளார்​.

தமி​ழ​கத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதி​கட்டத்தை எட்டி​யுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த நவ.4-ம் தேதி முதல் இதுவரை 6.16 கோடி பேருக்கு (96 சதவீதம்) 3.19 கோடி பேரின் படிவங்கள் (50 சதவீதம்) கணினியில் பதிவேற்​றப்​பட்​டுள்ளன. பூர்த்தி செய்த படிவங்களை வழங்க டிச.4-ம் தேதி வரை, அதாவது இன்னும் 9 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணி, அதிமுக சார்பில் நியமிக்​கப்​பட்டுள்ள பிஎல்​ஏக்கள் (வாக்​குச்சாவடி முகவர்கள்) ஆகியோரின் பணிகள் குறித்து அதிமுக மாவட்டச் செயலா​ளர்கள், மாவட்ட பொறுப்​பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் ஆகியோ​ருடனான ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. 

இதில் கட்சியின் பொதுச்​செயலாளர் பழனிசாமி பங்கேற்று, சென்னை ராயப்​பேட்​டையில் உள்ள கட்சி தலைமை அலுவல​கத்தில் இருந்​தவாறு, அனைத்து மாவட்ட நிர்வாகி​களுடன் ஆலோசனை நடத்தினார். அதற்காக அலுவல​கத்தில் ராட்சத டிஜிட்டல் திரைகள், ஒலிப்​பெருக்கி வசதிகள் செய்யப்​பட்​டிருந்தன. இக்கூட்​டத்தில் பழனிசாமி பேசிய​தாவது:

நம்முடைய மாவட்டச் செயலா​ளர்கள், மாவட்டப் பொறுப்​பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் வேகமாக​வும், துரித​மாகவும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள வேண்டும். தங்கள் மாவட்​டத்தில் இருக்கும் தொகுதி​களில் உள்ள அனைத்து பகுதி​களிலும் எஸ்ஐஆர் படிவம் கொடுக்​கப்​பட்டு விட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும். யாருக்​காவது படிவம் கொடுக்​கப்​ப​டாமல் இருந்தால் உடனடியாக நமது பிஎல்​ஏக்கள் மூலமாக பிஎல்​ஓக்களை தொடர்​பு​கொண்டு வழங்கு​வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்​களிடம் கொடுக்​கப்பட்ட படிவத்தை முறையாக திரும்பப் பெற்று பிஎல்​ஓ​விடம் சமர்ப்​பிக்க வேண்டும். வேகமாக துரிதமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். திமுக​வினர் தில்லு​முல்லு செய்வதை தடுத்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்​களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்​படுத்​துங்கள். அதிமுக​வுக்கு வாக்களிக்கும் வாக்காளர்​களின் பெயர்கள் ஒன்று கூட விடுபட்டு விடக்​கூ​டாது. அதனால், எஸ்ஐஆர் பணியை அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

வெளியூர் செல்லக்கூடாது: இதில் பிஎல்​ஏக்​களின் பங்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, இப்பணியில் ஆளும் திமுகவின் தலையீடு, அதிகாரிகள் மெத்தனம் தெரிய​வந்​தால், உடனடியாக மாவட்ட தலைமைக்​கும், வழக்கறிஞர்கள் அணிக்கும் தெரிவிக்​கப்​பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரி​யிடம் புகார் தெரிவித்து, அதன் விவரங்களை தலைமைக்கும் அனுப்ப வேண்டும். இன்னும் 9 நாட்கள் இருக்​கிறது. 

அதனால் டிச.4-ம் தேதி வரை மாவட்டச் செயலா​ளர்கள் யாரும் வெளியூர்​களுக்கு சென்று​விடக்​கூ​டாது. சொந்த மாவட்​டங்​களுக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்​படுத்த வேண்டும். சில மாவட்​டங்​களில் எஸ்ஐஆர் பணி கண்ணிப்பில் தொய்வு இருப்பதாக அறிகிறேன். இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்​டால், தொடர்​புடைய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்​சினை​களை முன்​வைத்து போ​ராட்​டங்​களை முன்​னெடுங்​கள். நமது ஆட்​சி​யில் மக்​களுக்கு செய்த சாதனைப் பட்​டியலை ஒவ்​வொரு வீட்​டுக்​கும்​ கொண்​டு​போய்​ சேர்க்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory