» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் ஒத்திவைப்பு: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:05:26 AM (IST)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் இன்று நடைபெற இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக திருமண்டல நிர்வாகி ஜோதிமணி அறிவித்துள்ளார்.
கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவின்படி தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலநிர் வாகியாக மீண்டும் நீதிபதி ஜோதி மணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 3.9.2025 அன்று விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, முதல் நான்கு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. இறுதியாக இன்றும், நாளையும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளான உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், கடந்த 26ந் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் 30.12.2025 மற்றும் 31.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்தல்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் தடை உத்தரவு குறித்து நிர்வாகிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து 30.12.2025 மற்றும் 31.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்கள் மற்றும் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாகவும் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

வடமாநில இளைஞரை சிறுவர்கள் தாக்கிய வீடியோ... தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:14:42 PM (IST)


