» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!

வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

நாகர்கோவிலில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் புத்தாண்டு தினத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவில் வசித்துவரும் செந்தில் என்பவரது மனைவி சந்தியா (25) புத்தாண்டு தினமான நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற இந்த தம்பதியருக்கு இடையில் சமீப நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory