» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்

வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் அதிகளவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 127 கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகமும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அதிகளவில் தி.மு.க. ஆட்சியில் தான் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பெருமையுடன் கூறுவோம். அதேபோல் 12 திருக்கோவில்களுக்கு சொந்தமான 20 திருத்தேர்கள் ரூ.1.85 கோடி செலவில் தேர்களுக்கான பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் குளம் புனரமைக்கும் பணிகள் ரூ.34 லட்சம் செலவில் நடந்தபோது எதிர்பாராதவிதாக ஏற்பட்ட சரிவினால் அந்த பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோர ஆணையருக்கு அனுப்பட்டுள்ளது. ஆணையர் அனுமதி பெற்று இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணிகள் தொடங்கும்.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் குளத்தை செப்பனிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2021-ம் ஆண்டு குமரி மாவட்ட கோவில்களுக்கு மொத்தமாக ரூ.3 கோடி மானியம் அரசு வழங்கியது.

கோவில்களின் விழா செலவினங்கள், கோவில் பணியாளர்கள், தினமும் ஏற்படும் உற்சவங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை அதிகம் ஆவதாவலும், ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் ஆண்டுக்கு ரூ.18 கோடியாக மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 490 கோவில்களுக்கு இதுவரை ரூ.58 கோடியில் மானியம் தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மேலும் 1000 ஆண்டு பழமையான கோவில்களுக்கு தொல்லியல் துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு குடமுழுக்கு நடத்தப்படும்.

குறிப்பாக 12 ஆண்டுகளுக்குள் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் 3967 திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆயிரம் கும்பாபிஷேகமாக சென்னையில் உள்ள ரவீஸ்வரன் கோவிலுக்கு நடக்க இருக்கிறது. தரையில் இருந்து 6 அடிக்கு கீழ் உள்ள ரவீஸ்வரன் கோவில் உள்பட 25 கோவில்கள் லிப்டிங் முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது.

இரணியல் கோட்டை பழைமை மாறாமல் கட்ட வேண்டும் என்பதற்காக ரூ.3 கோடியில் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.8 கோடி தேவை உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் அமைப்பதற்கு பெரும் திட்ட வளாகம் பணிகள் எடுத்து இருக்கிறோம். ரூ.33 கோடி செலவில் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, வடிவமைப்பு முடிந்து ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory