» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம்

வெள்ளி 2, ஜனவரி 2026 4:46:50 PM (IST)

திருச்செந்தூர் அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 13பேர்  காயம் அடைந்தனர்.

சென்னை, திருவெற்றியூரைச் சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28ஆம் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (31) ஓட்டி வந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் வந்த 13 பேர் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory