» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)
நாகர்கோவில் சந்திப்பில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் கன்னியாகுரியில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் "நாகர்கோவில் சந்திப்பில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, நாகர்கோவில் சந்திப்புக்குப் பதிலாக கன்னியாகுமரி சந்திப்பு வரை ரயில் சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கி/முடிவடையும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12667) வருகிற 8ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12668) வருகிற 9ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும்
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12689 )வருகிற 9ம் தேதி முதல் சென்டிரலில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12690 ) வருகிற 11ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும்.
தாம்பரம் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12657) வருகிற 11ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலில் முடிவடையாமல், கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12658 ) வருகிற 12ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு பதிலாக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

