» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்

புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இருவரும் பாமக தங்களுக்கு சொந்தம் என்று கூறி வரும் நிலையில், தேர்தலுக்கும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக - அன்புமணி தரப்பு பாமக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ராமதாஸ் பேசுகையில், அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல. அன்புமணியை பாமக தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சட்டத்திற்கு எதிரானது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதிமுக - பாமக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக திமுகவுடன் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் செங்கோட்டையன் மூலமாக ராமதாஸ் தரப்புடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory