» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)



தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும்  தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை தொடர்ந்து வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்ட பொதுமக்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் செங்கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி அம்பாள் மற்றும் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்

தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு, காய்கறி,  பழங்கள் படைத்து பாரம்பரியமாக புது பானையில். ஓலை வைத்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர். 


இதை தொடர்ந்து பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் விவசாயம் செழிக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர். ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் விளையாட்டு போட்டிகள் பானை உடைத்தல், கும்மியடித்தல், சிலம்பாட்டம் மற்றும் பலூன் உடைத்தல் நடைபெற்றன அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory