» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜன நாயகன் தணிக்கை விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 11:02:28 AM (IST)
ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 'ஜன நாயகன்' படத்தை மறு ஆய்வு குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் எனவும் கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது கார் மோதி 4 பெண் பக்தர்கள் பலி!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:37:24 AM (IST)

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? - தமிழக அரசு விளக்கம்
சனி 31, ஜனவரி 2026 4:59:26 PM (IST)

தமிழ் நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா? திருமாவுக்கு தினகரன் கண்டனம்!
சனி 31, ஜனவரி 2026 4:54:44 PM (IST)

அண்ணன், தம்பியாக ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்வோம் : எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன்
சனி 31, ஜனவரி 2026 3:47:51 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி; எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பில்லை - ஸ்டாலின்!
சனி 31, ஜனவரி 2026 3:38:47 PM (IST)

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது சர்வாதிகாரப் போக்கு: அண்ணாமலை தாக்கு..!
சனி 31, ஜனவரி 2026 12:11:48 PM (IST)

