» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி; எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பில்லை - ஸ்டாலின்!

சனி 31, ஜனவரி 2026 3:38:47 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது, "அதிமுக ஆட்சியில் பல திட்டங்களைச் சொன்னார்களே செய்தார்களா? எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை.

ஆனால், திமுக சொன்னதைத்தான் செய்யும்; செய்வதைத்தான் சொல்லுமென மக்களுக்குத் தெரியும். இதுதான் திமுக!அரசு ஊழியர்களுடைய 22 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். அதை, யாராலும் செய்ய முடியாதெனச் சொன்னார்கள். ஆனால், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பாணியில் திமுக அதைச் செய்திருக்கிறது.

நாம் சொல்லிவிட்டுச் செய்தவற்றைவிட, சொல்லாமலே பல முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதுதான் பெரிய சாதனை!

இன்னும் பல கனவுத் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பு திராவிட மாடல் 2.0இல் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் எனக்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழு அளவில் இருக்கிறது. அந்த நம்பிக்கையை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நான் போகும்போதும் உங்கள் முகத்தில் பார்க்கிறேன். மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory