» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)
வீட்டுக்கு மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 35 வயது ஆகிறது. இவர் ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து விதிகளுக்கு உட்பட்டு வீடு கட்டியுள்ளேன். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு பல முறை மனு அளித்தும் மின் இணைப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக தோவாளை மின்சார வாரிய இளநிலை பொறியாளரை நேரிலும், செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது உனக்கு மின் இணைப்பு தேவை என்றால் என்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என்றார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். எனினும் இதனை பற்றி உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லவில்லை. ஆனால் அந்த அதிகாரியின் அத்துமீறல் அதன்பிறகும் தொடர்ந்தது. எனவே பாதுகாப்பு கருதி புகார் கொடுக்க முடிவெடுத்தேன். இதுதொடர்பாக தாங்கள் விசாரித்து தோவாளை மின்வாரிய இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு மின் இணைப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுடன் அதிகாரி பேசும் ஆடியோ பதிவையும் கொடுத்திருந்தார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஜவகர் முத்து, பெண்ணிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இளநிலை பொறியாளர் விடுப்பில் சென்றதால், இதுதொடர்பாக அவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஜவகர்முத்து கூறினார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? - தமிழக அரசு விளக்கம்
சனி 31, ஜனவரி 2026 4:59:26 PM (IST)

தமிழ் நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா? திருமாவுக்கு தினகரன் கண்டனம்!
சனி 31, ஜனவரி 2026 4:54:44 PM (IST)

அண்ணன், தம்பியாக ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்வோம் : எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன்
சனி 31, ஜனவரி 2026 3:47:51 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி; எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பில்லை - ஸ்டாலின்!
சனி 31, ஜனவரி 2026 3:38:47 PM (IST)

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது சர்வாதிகாரப் போக்கு: அண்ணாமலை தாக்கு..!
சனி 31, ஜனவரி 2026 12:11:48 PM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)