» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
செவ்வாய் 27, ஜனவரி 2026 4:16:02 PM (IST)
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; "அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; "அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : தமிழக அரசு உத்தரவு
புதன் 28, ஜனவரி 2026 5:04:44 PM (IST)

கறிக்கோழி விலை உயர்வு படிப்படியாக குறையும்: உற்பத்தியாளர்கள் பேட்டி!
புதன் 28, ஜனவரி 2026 4:24:31 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை!
புதன் 28, ஜனவரி 2026 3:18:10 PM (IST)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை : ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
புதன் 28, ஜனவரி 2026 10:31:07 AM (IST)

