» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : தமிழக அரசு உத்தரவு

புதன் 28, ஜனவரி 2026 5:04:44 PM (IST)

வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகள், பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது. இந்த நாளில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory