» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 7:54:55 AM (IST)
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், சகோதரர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியது.இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜர் ஆகவில்லை. அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் மட்டும் நேரில் மே ஆஜர் ஆகினர். இதையடுத்து, வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்தி, வழக்கின் அடுத்த விசாரணையை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம் : என்.ஆனந்த் அறிக்கை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:43:31 AM (IST)

கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 29, ஜனவரி 2026 11:26:57 AM (IST)

தாமதமான நடவடிக்கை என்றாலும், யுஜிசி விதிகளில் மாற்றம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 29, ஜனவரி 2026 11:11:32 AM (IST)

பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை : நண்பர்களே தீர்த்துக்கட்டிய கொடூரம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:27:26 AM (IST)

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40 சதவீதம் உயர்வு : விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு
வியாழன் 29, ஜனவரி 2026 7:58:50 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.1ல் தைப்பூசம் : பூஜை நேரங்கள் மாற்றம்!
வியாழன் 29, ஜனவரி 2026 7:49:18 AM (IST)

