» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:34:54 AM (IST)
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐயும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியது போலவே, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதியாக ரூ.2,000-ஐ வரவு வைத்திருப்பது பயனாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐயும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியது போலவே, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதியாக ரூ.2,000-ஐ வரவு வைத்திருப்பது பயனாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 12:09:26 PM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)